• Jul 25 2025

சோறு கேட்டு சிமால் பாஸ் வீட்டுக்கு செல்லும் மாயா மற்றும் கூல் சுரேஷ்... உரிமை குரல் எழுப்பும் பிரதீப்.. கோபத்தில் கொந்தளிக்கும் தலைவர் பூர்ணிமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில்  தற்போது போட்டிகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் போட்டியாளர்கள் இடையிலும்  கடுமையாக போட்டி நிலவுகின்றது


அந்தவகையில் தற்போது மாயா மற்றும் கூல் சுரேஷ் நல்ல சாப்பாடு வேணும் என பிக் பாஸ் இடம் சொல்லி விட்டு சிமால் பாஸ் வீட்டுக்கு சென்று விடுகின்றனர். சிமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அவர்கள் வருவதற்கு அனுமதி அளிக்கின்றனர்.என் வீட்டுக்கு வருபவர்களுக்கு சாப்பாடு போடுவது எனது உரிமை அதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என பிரதீப் உரிமை குரல் எழுப்புகிறார்.


இந்த வார கேப்ட்டன் பூர்ணிமா தவறு செய்து தண்டனை அனுபவிப்பவர்களை எப்படி நீங்கள் சேர்த்து கொள்ளலாம். அது தவறான விஷயம் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் தண்டனை அனுபவிக்கிறார்கள் என்று கூறுகிறார். 


அதற்கு பிரதீப் சாப்பாடு கேட்டு வருபவர்களுக்கு சாப்பாடு வழங்குவது தமிழர் பண்பு அதைத்தான் நாங்கள் செய்கிறோம் என கூறுகிறார். மேலும் அதற்கு இணங்காத பூர்ணிமா எதிர்த்து கதைக்க அவரை இகழ்வது போல  பிரதீப் பாடல் பாடுகிறார். இதற்கிடையில் பூர்ணிமா மற்றும் ரவீனா இடையில் வாக்குவாதம் நடைபெறுகிறது.


இந்த சண்டையில் பூர்ணிமா பேச்சிக்கு கட்டுப்பட்டு மாயா மற்றும் கூல் சுரேஷ் பிக் பாஸ் ஹவுஸ்க்கு வருவார்களா?  பிக் பாஸ் தரும் தண்டனையை ஏற்றுக்கொண்டு சிமால் பாஸ் வீட்டில் சுவையான சாப்பாட்டுக்காக இருப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement