• Jul 24 2025

படுத்துக் கிடந்து கூல் சுரேஷ் பண்ணிய வேலை... மார்க்கமாக பார்த்துவிட்டுச் சென்ற மாயா... விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 7-ஆவது சீசனை தொட்டுள்ளது. ஏனைய சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் மக்களுக்கு பரீட்சியமான பலரும், திரைப்படம் மற்றும் கலைத்துறையில் வளர்ந்து வரும் ஒரு சிலரும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.


அந்தவகையில் மொத்தம் 18 பேர் இந்த சீசனின் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். அதிலும் நடிகர் கூல் சுரேஷ் முதல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தது ரசிகர்களுக்கு உச்ச கட்ட சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. இதனால் இனிமேல் பிக்பாஸ் ஷோவில் சுவாரஷ்யத்துக்கு பஞ்சம் இருக்காது எனக் கூறி வருகின்றனர்.


அனைவரும் எதிர்பார்த்தது போலவே கூல் சுரேஷும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றார். அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் கூல் சுரேஷ் படுத்துக் கிடந்து உடற்பயிற்சி செய்கின்றார். அப்போது அந்த இடத்திற்கு வந்த சக போட்டியாளரான மாயா கிருஷ்ணன் கூல் சுரேஷை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு செல்கின்றார்.

இதனை அவதானித்த பிக்பாஸ் ரசிகர்கள் "என்னென்ன எல்லாம் பண்ணுறான் பாருங்க" எனக்கூறி கூல் சுரேஷைக் கலாய்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement