• Jul 25 2025

மயில்சாமி வீட்டில் தொடரும் சோகம்... மருமகள்கள் செய்த காரியம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பினால் மண்ணை விட்டு மறைந்தார். இவர் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராகவும் உதவும் குணம் கொண்டவராகவும் விளங்கியுள்ளார். இதனால் இவரின் மறைவு பலரது மனதையும் உருக்கி இருந்தது.


மயில்சாமிக்கு அருமை நாயகம் மற்றும் யுவன் என இரு மகன்கள் உள்ளனர். தந்தையின் இறுதிச்சடங்குகளை ஒன்றாக நின்று இவர்கள் இருவரும் செய்து முடித்தனர். இந்நிலையில் தற்போது மயில்சாமி வீட்டில் அடுத்தடுத்த பெரிய பிரச்சனைகள் வெடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

அதாவது மயில்சாமியின் குடும்பத்தில் மாமியார் மருமகள் சண்டை என்பது தொடர்ந்து இருந்து வந்துள்ளது. ஆனால் நடிகர் மயில்சாமி உயிருடன் இருந்தவரையும் அந்தப் பிரச்சினைகளை சமாளித்து வந்துள்ளார். 


இந்நிலையில், தற்போது மயில்சாமியின் இரு மருமகள்களும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. இந்த விடயமானது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

Advertisement

Advertisement