• Jul 24 2025

முதலிரவு குறித்து கனவில் மிதக்கும் மீனா..! முத்துவுக்கு வந்த சிக்கல் - சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் அறிமுகம் செய்து கொண்டு நண்பர்களாகின்றனர். பிறகு ரவி ஜெயினை திருப்பி கொடுக்க சுதி தேங்க்ஸ் சொல்லி உனக்கு எதுவும் அடி படலையே என விசாரிக்கிறார்.

மறுபக்கம் மீனா முத்து முதலிரவுக்காக எல்லா விதமான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. பெட்டில் பூ தூங்கிக் கொண்டிருக்கும் போது பாட்டி ஒரு கதை சொல்ல அதைக் கேட்டு மீனா சிரிக்கிறார். பிறகு முத்து உடன் டூயட் பாடுவது போல கனவு காண்கிறார். மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு இருவரும் நடனமாடி முடிய மீனா கனவு என தெரியாமல் நிஜத்தில் ஆடிக் கொண்டிருக்க அதை பார்த்து எல்லோரும் சிரிக்கின்றனர்.

அதன் பிறகு முத்து விழும் அடி வாங்கிய வட்டிக்காரர் பணம் கொடுத்தவர்களிடம் மரியாதை இல்லாததால் அதற்கெல்லாம் காரணம் முத்து தான், அவனை சும்மா விடக்கூடாது என திட்டம் போடுகின்றனர். முத்துவிடம் இருக்கும் காரை பறிக்க பிளான் போட்டு செல்வத்துக்கு போன் செய்து பாண்டிச்சேரி போகவேண்டும் என்று சொல்லி பேசுகின்றனர்.

பிறகு செல்வம் முத்துக்கு ஃபோன் செய்து பாண்டிச்சேரி சவாரி குறித்து சொல்ல ஒரு நாளைக்கு 8000 ரூபாய் கிடைக்கிறது எல்லாம் பெரிய விஷயம், பார்த்து போயிட்டு வா என்று சொல்லி ஃபோனை வைக்க செல்வம் பாண்டிச்சேரி போனதும் அவருடன் வந்த நபர்கள் சரக்கு பாட்டில் மீது திராட்சையை நிரப்பி நாங்க வர லேட் ஆகும் இதை மட்டும் சென்னையில் கொண்டு போய் சேர்த்துடுங்க என சொல்லி செல்வத்திடம் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர்.

அதன் பிறகு வட்டிக்காரன் போலீசுக்கு போன் போட்டு தகவலை சொல்கிறார். அந்த முத்து காரை இழந்து என் கால்ல விழுந்து கதறனும் என்ன சொல்லி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement