• Jul 23 2025

அப்பா பேச்சைக் கேட்டு வில்லியாக மாறிய மீனா- இரண்டாக உடைந்த குடும்பம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் மூன்று வருடங்களுக்கு மேலாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் சமீபத்தில்  அனைவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்பது போன்று கதை நகர்ந்து வந்த நிலையில், இனி இதில் மிகப்பெரிய மாற்றம் நடக்க உள்ளது. மீனா மீண்டும் தன் அப்பாவின் பேச்சை கேட்டு, சண்டை போட உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை பல போராட்டத்திற்கு பிறகு தற்போது கர்ப்பமாகியுள்ள நிலையில், ஐஸ்வர்யாவும் திடீரென்று கர்ப்பமாக இருப்பதாக காட்சிகள் வந்தது. இன்னொரு பக்கம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தனம் மீண்டும் கர்ப்பமாக உள்ளது போல் காட்சிகள் வருகிறது. முல்லை கர்ப்பமாக இருப்பதால் கார் வாங்க யோசித்தார்கள்.


ஆனால் தனக்கு இப்படி எதுவும் செய்யவில்லை என்றும், வீட்டில் அனைவருக்கும் உடம்பு முடியாமல் இருப்பதால் மீனா தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால், மீனா மிகவும் கோவமாக இருக்கிறார். மீனாவின் கோவத்தை பயன்படுத்திக் கொண்டு ஜனார்த்தனன் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மீனாவை உனக்கு எதாவது இந்த வீட்டில் இப்படி செய்திருக்கிறார்களா? நீ என்றால் மட்டும் அந்த வீட்டில் தனி இளக்காரம் என்று ஏற்றிவிடுகிறார்.


இதனை வைத்து மீனா குடும்பத்தில் உள்ளவர்களுடன் சண்டை போடுகிறார். ஜீவாவும் கார் விஷயத்தில் சற்று வருத்தமாக இருந்ததால், இவர்கள் சண்டை போட்டுக் கொண்டு ஜனார்த்தனன் வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். அதன்பிறகு, தான் வழக்கம் போல் மீனா தன் தவறை உணர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் ஒன்று சேருவது போல் எபிசோடுகள் வந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய வாய்ப்புகள் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது..


Advertisement

Advertisement