• Jul 24 2025

எல்லோரிடமும் எல்லா உண்மைகளையும் சொன்ன மீனா- கண்ணன் கொண்டு வந்த ஆதாரம்- மூர்த்தி போட்ட பிளான்- Pandian Stores Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மீனா தன்னுடைய தங்கச்சிக்கு போன் செய்து உடனடியாக ஹாஸ்பிட்டலுக்கு வரச் சொல்கின்றார். எனவே அவர் வந்ததும் அப்பாவை நீ தான் பார்த்துக்கனும் ஒரு அவரச வேலையாக நான் வெளில போறேன். யாரையுமே நீ உள்ளே விடக்கூடாது என்று சொல்லி விட்டுப் போகின்றார்.இதனால் அவரும் ஓகே என்று சொல்லி தன்னுடைய அப்பாவுடனேயே நிற்கின்றார்.


தொடர்ந்து மூர்த்தி வீட்டில் கதிரையும் ஜீவாவையும் எப்படி விடுவிக்கப்போகின்றாம் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து மீனா வருகின்றார். மீனாவைக் கண்டதும் முல்லை உள்ளே போக மூர்த்தி நில்லுப்பா மீனா என்ன சொல்ல வாறாங்க என்று கேட்போம் என்று சொல்கின்றார்.

பின்னர் மீனா பிரசாந்த் மீது தான் தனக்கு சந்தேகமாக இருக்கு என்று சொல்ல ஆரம்பித்து தன்னுடைய அப்பாவின் இந்த நிலமைக்கு பிரசாந்த் தான் காரணம் என எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகின்றார்.இதைக் கேட்ட மூர்த்தி அதிர்ச்சியடைகின்றார். அப்போது மீனா இந்த விஷயம் எங்களுக்கு தெரிஞ்சிடுச்சு என்று பிரசாந்திற்கு தெரியக்கூடாது.


அப்பிறம் அவன் ரொம்பவே உசார் ஆகிடுவான். அவனுக்கு தெரியாமல் தான் அவனை பிடிச்சுக்கொடுக்கனும் என்று சொல்ல எல்லோரும் கதிரும் ஜீவாவும் ஜனார்த்தனனுக்கு இப்படி நடந்த சந்தர்ப்பத்தில ஜீவாவும் கதிரும் எங்க இருந்தாங்க என்று ஆதாரம் மட்டும் நமக்குக் கிடைச்சால் போதும் என்று சொல்கின்றார்.


அப்போது கண்ணன் தான் ஆதாரத்தைக் கொண்டு வருகின்றேன் என்று போய் கல்யாண மண்டபம் ஒன்றில் கதிர் இருந்தார் என்பதற்கான சசிடி ஆதாரத்தைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். மேலும் ஜீவாவுக்கு ஆதாரம் வேண்டும் என்று யோசிக்க மூர்த்தி ஐஸ்வர்யா நினைச்சால் இதைப் பண்ண முடியும் என்று சொல்கின்றார். இதைக் கேட்ட எல்லோரும் யோசிக்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.





Advertisement

Advertisement