• Jul 25 2025

வெற்றி வீட்டுக்கு சீர் வரிசையுடன் வரும் மீனாட்சி வருத்தத்தில் இருக்கும் சக்தி- நடக்க போவது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!


ஷு தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை  ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

கோகிலாவும் கனக லிங்கமும், மீனாட்சி வீட்டிற்கு வந்து கூடுதலாக நகை கேட்க மீனாட்சி யோசிக்கிறாள். அடுத்து இந்த விஷயத்தை சக்தியிடம் சொல்ல வேண்டாம் என்று துர்காவிடமும், யமுனாவிடமும் சொல்கிறாள்.

அடுத்து வெற்றியின் வீட்டில் கிரியும் திடியனும் நாம் கல்யாணத்தை நிறுத்திய விஷயம் வெற்றிக்கு தெரிந்தால் என்ன நடக்குமோ என பயப்பட, சக்தி அவள் ரூமில் தனியாக அமர்ந்து வருத்தத்துடன் இருக்க வெற்றி அவளை விசாரிக்க, சக்தி வீட்டு ஞாபகமாக இருக்கிறாள் என புரிந்து கொள்கிறாள்.


அடுத்து வெற்றி மீனாட்சி வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு சத்தி வருத்தத்தில் இருப்பதாக கூற, யமுனா சக்திக்கு முறைப்படி சீர்வரிசை வைத்து அழைக்க முடிவு செய்கிறாள். ஆனால் மீனாட்சி கலந்து கொள்வதா வேண்டாமா என்ற வருத்தத்தில் இருக்கிறாள்.

இந்த பக்கம் வெற்றி சக்தியிடம் உங்க அம்மா கண்டிப்பாக வருவார் என்று பேசிக் கொண்டிருக்க வெளியே ஆட்டோவில் யமுனா, துர்கா, மீனாட்சி என மூவரும் சீர்வரிசை உடன் வருகின்றனர்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஷு தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Advertisement

Advertisement