• Jul 25 2025

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை லயாவின் தங்கச்சி தான் ராஜா ராணி சீரியலில் நடிப்பவரா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


யூடியூப் தளத்தில் ஊக்கம் ஊட்டும் பேச்சுக்களை வீடியொவாகப் பதிவிட்டு பிரபல்யமானவர் தான் சசிலயா.தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தனது வாழ்க்கையை பேஸ்புக்கில் இருந்து தொடங்கினார் மற்றும் ஆரம்பத்தில் பல மோசமான கருத்துக்களை எதிர்கொண்டார். ஆனால் இப்போது முழுமையாக நேர்மறையான கருத்துகள் கிடைத்து வருகின்றன.

தற்போது இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 500K க்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். சமூக ஊடகங்களிலும் மற்றும் எல்லா இடங்களிலும் அவரது வீடியோக்களை நாம் பார்க்கலாம். பெரும்பாலான கல்லூரிகள் இவரை தலைமை விருந்தினராக அழைக்கின்றன. அவரது வெற்றிக்கு காரணம் அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் கடின உழைப்பு தான் எனலாம்.


இதனை அடுத்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பினையும் பெற்று வருகின்றார். அதன்படி சமீபத்தில் அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் போலீஸ் கேரக்டர் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது தவிர ஷு தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் இவரது சகோதரி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.அதாவது இவரின் சகோதரி வேற யாரும் இல்லையாம். ராஜா ராணி சீரியலில் ஜோதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா தானாம்.இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை லயா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இப்புகைப்படத்தைப் பார்த்த பலரும் இதுவரை தெரியாமல் போச்சே எனக் கூறியும் வருகின்றனர்.


Advertisement

Advertisement