• Jul 26 2025

சாப்பிடும் போது அசிங்கப்படுத்திய மீனாவின் அப்பா...கொதித்தெழுந்த மூர்த்தி...வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தங்களது  வீட்டை மீனாவின் அப்பாவுக்கு விற்றுவிட்ட நிலையில் அதில் இருந்து  திடீரென வெளியேற்றப்பட்டனர், அதன் பின் கடையையும் மூட வைத்து மோசமான வில்லத்தனம் செய்து வருகிறார் மீனாவின் அப்பா.

அதன் பின்னரும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை எதாவது செய்தே ஆகவேண்டும் என சொல்லி தற்போது நிச்சயதார்த்தத்திற்கு வரவைத்து  வேணுமென்றே அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

மீனாவின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் என்பதால் மூர்த்தி மற்றும் மொத்த குடும்பமும் அங்கே வருகின்றார். மீனாவின் தங்கையே நேரில் வந்து அழுது அழைத்ததனால் தான் அங்கே செல்ல மூர்த்தி ஒப்புக்கொள்கிறார்.

ஆனால் அங்கு  சென்றவர்களுக்கு  ஜூஸ் கூட கொடுக்கக்கூடாது என சொல்லி ஜனார்த்தனன் முதலில் அவமானப்படுத்துகிறார். அதன் பின்னர் மூர்த்தி குடும்பத்தினர் எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது "இவங்கள கூப்பிடவே இல்ல, ஆனா முதல் பந்தில சாப்பிட வந்துட்டாங்க. வெக்கமே இல்லாம" என சொல்லி அசிங்கப்படுத்துகிறார்.

அதை கேட்டு அவர்கள் கோபமாக எழுந்து நிற்பது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கின்றது. 



Advertisement

Advertisement