• Jul 25 2025

கேரளா புடவையில் கும்முனு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை மீரா ஜாஸ்மின் ! அடேய் ஆளே மாறிட்டாங்களே!

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.இவர் தமிழில் மாதவன் நடித்த ரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், என்று பல படங்களில் நடித்தார்.


சண்டைக்கோழி திரைப்படத்தில் நடிகர் விஷாலுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் நடிகை மீரா ஜாஸ்மீன். இந்த படத்தில் மிகவும்  க்யூட்டாகவும், குசும்புத்தன பெண்ணாவும் நடித்திருப்பார். இப்படத்தில் இடம் பெற்ற ''தாவணிப் போட்ட தீபாவளி'' பாடல் இன்று வரை ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த பாடலாகவே உள்ளது.


இந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோருடன் நடித்த பெருமையும்   மீரா ஜாஸ்மினுக்கு இருக்கிறது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.இவ்வாறு பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, 2014ம் ஆண்டு துபாயை சேர்ந்த இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். 


பின்னர் 2016ம் ஆண்டு ,இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து மிகவும் குண்டாக இருந்தார் மீரா ஜாஸ்மின்.தற்போது உடல் எடையை குறைத்து சிலிம் ஆக மாறிய மீரா ஜாஸ்மின், ஜெயராமுக்கு ஜோடியாக Makal என்ற மலையாளப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப்பின் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். 


இந்த படத்தை அடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தூக்களாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து வருகிறார்.தற்போது,மீரா ஜாஸ்மின் தவெள்ளை நிறத்தில் பட்டு புடவை கட்டிக்கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் வருகின்றன.


Advertisement

Advertisement