• Jul 25 2025

மேகனுக்கு பேரிடியாக வந்த செய்தி, அதிர்ச்சியில் அரச குடும்பத்தினர்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

அரண்மனை வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அமெரிக்காவில் குடியேற ஹரி- மேகன் தம்பதி முடிவு செய்த தகவல் வெளியானதும் இளவரசர் வில்லியம்- கேட் தம்பதி நிம்மதி பெருமூச்சு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜகுடும்ப பொறுப்புகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதாகவும் அமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும் ஹரியும் மேகனும் அறிவித்ததை அடுத்தே இளவரசர் வில்லியம் நிம்மதியடைந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், ராஜகுடும்பத்தில் பிரிவினையை ஏற்படுத்திய தமது சகோதரரை இளவரசர் வில்லியம் இன்னமும் மன்னிக்க முடியாத நிலையில் இருப்பதாகவே தெரியவந்துள்ளது.மேலும், இளவரசர் ஹரிக்கு பேரிடியாக தமது பிள்ளைகள் இருவருக்குமான பட்டங்களை பறிக்க மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமது பிள்ளைகளுக்கான பட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது ஹரி- மேகன் தம்பதியை கோபப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே, குடும்ப பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர மூன்றாவது தரப்பின் ஆலோசனையை பெற வேண்டும் என்ற ஹரியின் ஆலோசனைக்கு கமிலா கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement