• Jul 25 2025

'நயன்தாராவை கேட்ட என்று சொல்லுங்க அமைச்சர்'.. உதயநிதியின் காரை விரட்டி சென்று கலாய்த்த ரசிகர்.. வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வந்த உதயநிதி சிறந்த அரசியல் வாதி என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வாங்கி வெளியிட்டு வருகிறது. 


இதற்கு முக்கிய காரணமே தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் கையில் தான் அந்த நிறுவனம் இருக்கிறது. பல முன்னணி நடிகர்களின் படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் விநியோகம் செய்து வருகிறது. மேலும் அமைச்சர் பொறுப்பை ஏற்றதும் உதயநிதி படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.


இந்நிலையில் அரசியல் சம்பந்தமான பிரச்சாரங்களுக்காக உதயநிதி பல இடங்களுக்கும் சென்று வருகின்றார். அவ்வாறு சென்று வரும் உதயநிதி ஸ்டாலின் காரை ஒரு நபர் பைக்கில் ஃபாலோ செய்துள்ளார். உதயநிதியின் காரிற்கு அருகில் சென்றதும் அந்த நபர் "நயன் தாராவை கேட்டன்னு சொல்லுங்க அமைச்சர்" என்று கிண்டலடிக்கும் வகையில் சத்தமாக கூறியுள்ளார்.


இருப்பினும் கார் கண்ணாடி மூடி இருந்தமையினால் அந்த நபர் பேசியது உதயநிதிக்கு கேட்காமல் போனது. மேலும் நயன்தாராவுடன் உதயநிதி ஸ்டாலின் ஒருசில படங்களில் ஜோடியாக நடித்த போது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் கிசுகிசுக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement