• Jul 24 2025

தனது மகனின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட மிர்ச்சி செந்தில் - லைக்குகளை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் மக்களிடத்தில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

எனவே கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் சின்னத்திரை பக்கம் தான் வருகிறார்கள்.

இங்கே மக்களின் பேராதரவை பெறுபவர்கள் அப்படியே வெள்ளித்திரைக்கு செல்கிறார்கள்.

மிர்ச்சி செந்தில் வானொலியில் முன்னணி ஆர்ஜேவாக இருக்கும் ஒரு பிரபலம். இவர் சின்னத்திரையில் தொடர்ந்து சீரியல்கள் நடித்து கலக்கி வருகிறார்.

அதிலும் கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் தொடர்களில் அதிகம் நடிக்கிறார். இப்போது ஜீ தமிழில் அண்ணா என்ற தொடரில் நடிக்கிறார்.

சரவணன்-மீனாட்சி தொடர் நடிக்கும் போது உடன் நடித்த நாயகி ஸ்ரீஜா மீது காதல் ஏற்பட இருவரும் திருமணமும் செய்துகொண்டார்கள். திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பிறகு ஒரு மகனும் பிறந்தார்.

நேற்று ஸ்ரீஜாவிற்கு பிறந்தநாள், இதனால் தனது மகனுடன் அவர் சேர்த்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு மனைவிக்கு வாழ்த்து கூறியதோடு நண்பர்கள் தின வாழ்த்தும் கூறியுள்ளார்.



Advertisement

Advertisement