• Jul 24 2025

ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்-என்னவொரு மாஸ் லுக்!-செம மாஸா இருக்கும் போலயே..!

stella / 2 years ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கின்றார்.

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வெளியான நிலையிலும் அது பெரிதாக ட்ரெண்டாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் இணைந்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.


சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் சேர்த்து லாலேட்டனின் அட்டகாசமான ஜெயிலர் படத்தின் லுக்கையும் வெளியிட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட மூன்று மாநிலத்தின் முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ள நிலையில், ஜெயிலர் படம் வெளியானால் தென்னிந்தியாவே தெறிக்கப் போகுது என ரஜினிகாந்த் ரசிகர்கள் டுவீட்களை போட்டு டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


கடந்த ஆண்டு கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இந்த ஆண்டு அதே போல மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அஜித் vs விஜய் மோதலை விட ரஜினிகாந்தின் ஜெயிலர் vs கமல்ஹாசனின் இந்தியன் 2 மோதல் மிகவும் பிரம்மாண்டமா இருக்கும் என தெரிகிறது.


Advertisement

Advertisement