• Jul 24 2025

பணம் உலகை காலி பண்ணிடும்-விபத்திலிருந்து மீண்டு வந்த விஜய் ஆண்டனியின் மிரட்டலான போஸ்டர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.இப்படத்தில் இவர் இசையமைத்திருந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருந்தன.இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அடையாளப்பட்டார் விஜய் ஆண்டனி. 

இருப்பினும் அவரை முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் அமர வைத்தது காதலில் விழுந்தேன் திரைப்படம். குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாக்க முக்க' பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது.தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி 'நான்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.


இவர் நடித்த 'சலீம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பல படங்களில் நடித்தாலும் பூ பட இயக்குநர் சசி இயக்கத்தில் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் கதையும், அவரது நடிப்பும் படத்தை பெரும் ஹிட்டாக்கின.பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தையும் சசி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. 


எனவே இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்த விஜய் ஆண்டனி இயக்குநராகவும் இப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் உள்நாடு, வெளிநாடு என விறுவிறுப்பாக நடந்து வந்தது.இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழு மலேசியா சென்றது. அங்கு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தற்பொழுது அதிலிருந்து குணமடைந்து வருகின்றார்.


இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படம் குறித்த அப்டேட் இன்று மாலை  வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, "பணம் உலகை காலி பண்ணிடும்" என்ற வாசகத்தோடு வெளியாகியிருக்கும் அப்டேட்டில், பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் 4 நிமிட ஸ்னீக் பீக் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படமானது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement