• Jul 25 2025

காசு, ஷோ தாண்டி.. தன்மானம் முக்கியம்.. இப்பவே வெளியே போறேன்.. ஜனனி விஷயத்தால் கடுப்பான அமுதவாணன்-

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பித்து 40 நாட்களைக் கடந்துள்ள நிலையில் நேற்றைய தினம் கமல்ஹாசனின் எப்பிஷோட் என்பதால் என்ன நடந்தது என்று பார்ப்போம் வாங்க.

அதாவது ஹவுஸ்மேட்மை சந்தித்த கமல்ஹாசன் முதலில் வாள் மற்றும் அட்டகத்தி என அவர்கள் முன் இருக்கும் இரண்டு பொருட்களையும் யாருக்காவது கொடுக்கும் படி கூறுகின்றர். அதாவது வாள் கொடுத்தால் அவர் மிகவும் உறுதியான போட்டியாளர் என்றும் அட்டகத்தி கொடுத்தால் அவர் டம்மி பீஸ் என்றும் கூறுகின்றார்.


இவ்வாறாக ஒவ்வொருவரும் தமக்கு தோன்றுபவர்களுக்கு இதனைக் கொடுத்தார்கள். அதன்படி அசீமிற்கு தான் அதிகளவான அட்டகத்திகள் கிடைத்தன. இதனால் கடுப்பான அசீம் அமைதியா இருந்தா கேம் ஆட சொல்றீங்க, சண்டைப் போட்டு கேம் ஆடினால் அராஜகம்னு சொல்றீங்க எப்படித்தான் இந்த கேமை ஆடுவதுன்னே தெரியலையே என புலம்பிக் கொண்டிருந்தார்.

இந்த டாஸ்க்கினைத் தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் சேஃவ் ஆனார். தொடர்ந்து இன்னொரு டாஸ்க் கொடுத்தார். அதாவது வில் மற்றும் அம்பினை போட்டியாளர்கள் கொடுக்க வேண்டும். இதில் அமுதவாணனுக்கு அதிக வில்லும் ஜனனிக்கு அதிக அம்புகளும் கிடைத்தன.


இதனால் கடுப்பான அமுதவாணன் ஜனனியின் வில் நான் தானா.. நான் ஜனனிக்கூட மட்டும் தான் பேசுறேனா என பொங்கி எழுந்து விட்டார்.பிக் பாஸ் இப்பவே கதவை திறந்து விடுங்க நான் என் வீட்டுக்கே போறேன். உங்க ஷோவே வேண்டாம்காசு, ஷோ எல்லாம் எனக்கு முக்கியமில்லை. தன்மானம் தான் முக்கியம் இப்பவே வெளியே போறேன். ஒண்ணு விக்ரமன் உடன் பேசிய அந்த வீடியோவை போட்டுக் காட்டுங்க இல்லை என்னை வெளியே அனுப்புங்க பிக் பாஸ் என்று பேசிக் கொண்டிருந்தார்.


பின்னர் இந்த வீட்டிலிருந்து நிவாஷினி வெளியேற்றப்பட்டதோடு அவர் ஹவுஸ்மேட்டிற்கு தனது வாழ்த்துக்களையும் கூறிச் சென்றார். இவ்வாறாக இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.




Advertisement

Advertisement