• Jul 25 2025

'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ' -பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த வனிதா விஜயகுமார்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகை வனிதா விஜயகுமார் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்டு நடிப்பிலிருந்து விலகிய வனிதா விஜயகுமார், விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1, பிக்பாஸ் சீசன் 3, கலக்கப் போவது யாரு, பிக்பாஸ் ஜோடிகள் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.


அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் ராதாரவியுடன் கொடைக்கானலில் புதிய படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டார். தொடர்ந்து அதிரடியாக பல கருத்துக்களை கூறி தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் வனிதா விஜயகுமார்.


இந்நிலையில் தற்போது தான் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து, கோயிலில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று கேப்ஷனில் சாமியை குறிப்பிட்டுள்ளார்.


அடுத்தடுத்து அடாவடி கருத்துக்களால் நெகட்டிவ் விளம்பரங்களுக்கு உள்ளாகி வருகிறார் வனிதா விஜய்குமார். தன்னுடைய மூன்றாவது கணவரையும் இவர் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஒருபுறம் படங்களிலும் பிசியாகியுள்ள நிலையில், தற்போது கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement