• Jul 26 2025

அம்மா நடன இயக்குநர்...மகன்...? கலா மாஸ்டர் பகிர்ந்த வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடன இயக்குநர்களில் தனக்கான இடத்தை பிடித்து முன்னணியில் இருப்பவர் கலா மாஸ்டர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் 4000க்கும் மேற்பட்ட பாடல்களில் பணிபுரிந்துள்ளார்.


1996இல் பெங்களூருவில் நடைபெற்ற ''மிஸ் வேர்ல்டு'' அழகு நிகழ்ச்சி போட்டியில் நடனம் அமைக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது பெரிய விஷயம் என்று தான் கூற வேண்டும்.

மேலும் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் நடத்திய மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மாபெறும் சாதனை படைத்தது, நிறைய சீசன்கள் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகின.


அதில் கலா கிழி கிழி கிழினு கிழிச்சிட்டீங்க என்று கூறும் கமெண்ட் மிகவும் பிரபலம்.


கோவிந்தராஜன் என்பவரை திருமணம் செய்த கலா மாஸ்டர் சில காரணங்களால் அவரை விவாகரத்து செய்தார்.அத்தோடு கடந்த 2004ம் ஆண்டு மகேஷ் என்பவரை மறுமணம் செய்த கலா மாஸ்டருக்கு வித்யூ என்ற மகன் இருக்கிறார்.


மேலும் இவருக்கு பாடுவதில் அதிக ஆர்வம் உள்ளதாம். அவர் பாடும் வீடியோக்களை கலா மாஸ்டர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்,


Advertisement

Advertisement