• Jul 25 2025

மீண்டும் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கும் முகேன் - கதை இது தானா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

`வேலன்' படத்தை இயக்கிய கவின் டைரக்டு செய்யும் புதிய படத்தில் முகேன் நாயகனாக நடிக்கிறார். `பிக்பாஸ்' மூலம் பிரபலமான முகேன் முதலில் `வேலன்' படத்தில் நாயகனாக அறிமுகமானார். 

மேலும் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது மீண்டும் நாயகனாக நடிக்கிறார். இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். 

கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது. கிரைம், திரில்லர் கதையம்சத்தில் உருவாகிறது. படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

படத்தின் ஷூட்டிங் சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.எனவே மேலதிக அப்டேட்களுக்காக பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement