• Jul 25 2025

பிரமாண்டமாக நடந்த முகேஷ் அம்பானியின் மகனது நிச்சயதார்த்த விழா- கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும்  முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.இதனால் இவர்களின்  நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள அம்பானியின் அண்டிலா வீட்டில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது.


இவர்களின் திருமணத்தில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதிலும் குறிப்பாக பாலிவூட் நட்சத்திரங்கள் அதிகமானோர் கலந்த கொண்டனர்.


நடிகர் சல்மான் கான், திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். இவரைப் போல நடிகை தீபிகா படுகோனும் தனது கணவரான நடிகர் ரன்வீர் சிங் உடன் கலந்து கொண்டார்.


முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஷாகீர் கான் தனது மனைவியுடன் வந்து ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டார்.


பாலிவுட்டில் ரீல் ஜோடிகளாக இருந்து, பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டு ரியல் ஜோடிகளான ஆலியா பட், ரன்பீர் கபூர் தம்பதி ஜோடியாக வந்து அம்பானி வீட்டு விழாவில் கலந்துகொண்டனர். ஜான்வி கபூர், தனது காதலனுடன் வந்து அம்பானி மகனின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.இவர்களின் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement