• Jul 25 2025

இசை தான் என் வாழ்க்கை,காதல் எல்லாமே ..என்னிடமிருந்து பிரிக்கவே முடியாது.. மனம் திறந்த பாடகி நித்யஸ்ரீ...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல சங்கீத மேதை டி.கே .பட்டம்மாளின் பேத்தி தான் நித்யஸ்ரீ.இவரது தந்தை மிருதக வித்வான் என்பதால், தந்தையுடன்சேர்ந்து பல கச்சேரிகளில் பாடி உள்ளார்.

பாடகி நித்ய ஸ்ரீ மகாதேவனின் குரலுக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. மேடையில் அமர்ந்து ராகம் படிக்கும் போது மயகாத உள்ளகளும் மயங்கி விடும். கச்சேரி முடியும் வரை தனது குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டுவிடுவார். 

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நித்ய ஸ்ரீ மகாதேவன் மனம் திறந்து பல விஷயங்களை பேசி உள்ளார். எனக்கு சிறு வயது முதலே இசையின் மீது தான் ஆர்வம் இருந்தது. இருப்பினும் பி.காம் படித்தேன். அப்போது இருக்கும் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும்,என்ன வேலை செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். ஆனால், குழந்தை பருவத்தில் எனக்கு அந்த தெளிவு இல்லை.

 என் பெற்றோரும் என்னை படிப்பு விஷயத்தில் வற்புறுத்தவில்லை. விருப்பமானதை படி என்று தான் சொன்னார்கள். இரவு 10 மணிக்கு மேல் படித்தால், படித்தது போதும் என்று தான் என் அப்பா சொல்லுவார். அதை தாண்டி என்னோட விருப்பத்தில் தான் நான் படித்தேன்.இசை எனக்கு பிடித்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட என் பெற்றோர் அதற்காக என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

இன்று இசை என் வாழ்க்கையாகி விட்டது. இசையை என்னிடம் இருந்து பிரிக்க முடியாத விசயமாகி விட்டது. அதிலிருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை. அந்த அளவிற்கு இசை மீது எனக்கு காதல் .இவ்வாறாக கர்நாடக பாடகி நித்யஸ்ரீ கூறியுள்ளார்.

Advertisement

Advertisement