• Jul 25 2025

கண்டிப்பாக இந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற வேண்டும்- பிக்பாஸ் ஏடிகே போட்ட டுவிட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமாகி இந்த மாதம் நிறைவடைந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா, தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 

மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.2-வது வாரம் முதல் ஒவ்வொரு வாரமும் ஓட்டிங் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இறுதி வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வென்ற அமுதவாணன் உடன், அசீம், கதிரவன், ஷிவின், விக்ரமன் மைனா நந்தினி, ஏடிகே என 7 பேர் இருந்தனர்.


 அந்த வார இறுதியில் ஏடிகே எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். அவர் வெளியேறும் போது கமல் அவரது சொந்த கேப்பை (Cap) பரிசாக வழங்கினார்.கதிரவன் மற்றும் அமுதவாணன் இருவரும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை தொடர்ந்து நந்தினியை புது விதமாக வாரத்தின் நடுவிலேயே பிக்பாஸ் எலிமினேட் செய்து வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்.

அதனை தொடர்ந்து விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் மட்டும் இறுதியாக இருந்தனர். இவர்களில் யார் வெற்றியடைவார்கள் என்று சோஷியல் மீடியாக்களில் பல களேபரங்களே நடந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று வெளியான ஃபைனலில்ஸ் அசீம் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் ஏடிகோ தற்போது தனது  டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த கேம் முடிந்துவிட்டது. தற்போது உண்மையான வேட்டைக்கு தயாராக உள்ளேன். மேலும் பிரபல இசையமைப்பளர் அனிரூத் உடன் பணியாற்ற விருப்பம் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்தினைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement