• Jul 24 2025

சாந்தி முகூர்த்தத்திற்கு ஓகே சொன்ன முத்து- வெட்கப்பட்டு நின்ற மீனா- வெளியாகிய ப்ரோமோ வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மக்கள் மனம் கவர்ந்த பிரபல சீரியல்களில் ஒன்று 'சிறகடிக்க ஆசை'. ஏனைய சீரியலைப் போலவே இந்த சீரியலிற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.

இந்த சீரியலில் தற்பொழுது முத்துவும் மீனாவும் முத்துவின் பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளனர்.மனோஜின் கல்யாணத்திற்கு காசு வேண்டும் என்பதற்காக விஜயாவும் மாமி வீட்டிற்கு வந்து கஷ்டப்படுகின்றார்.


அத்தோடு அண்ணாமலையிடம் சொல்லி எப்படியாவது தன்னுடைய மாமியாரிடம் இருந்து பணத்தை வாங்கி விடவேண்டும் என்பதற்காக எல்லா வீட்டு வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கின்றார். விஜயாவின் இந்த மாற்றம் முத்துவுக்கு அதிர்ச்சியாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் தற்பொழுது ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் முத்துவின் பாட்டி இன்டைக்கு எப்படியாவது சாந்தி முகூர்த்தம் நடந்து விட வேண்டும் என்று கூறுகின்றார். முதலில் மறுத்த முத்து பின்பு சாந்தி முகூர்த்தத்திற்கு ஓகே சொல்கின்றார். இதனால் மீனா சந்தோஷமடைகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement