• Jul 23 2025

நான் சினிமாவில் வளர்ந்து நிற்பதற்கு முத்துக்காளை அண்ணனும் ஒரு காரணம்- நெகிழ்ந்து பேசிய நடிகர் சூரி

stella / 2 years ago

Advertisement

Listen News!

வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் சூரி. அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சூரி அவர்கள் விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார்.

வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அது போல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது அடிக்கடி பயன்படுத்தி தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் தற்பொழுது கதாநாயகனாக விடுதலை என்னும் படத்தில் நடித்திருக்கின்றார்.


படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் முத்துக்காளை அண்ணன் இல்லை என்றால் நான் இல்லை என்று சூரி பேசிருக்கும் வீடியோ இல்லை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் சூரி கலந்திருந்தார். அப்போது நடிகர் முத்துக்காளைக்கு விருது வழங்கப்பட்டிருந்தது. விருது வழங்கியவுடன் சூரி கூறி இருந்தது, முத்துக்காளை அண்ணனுடன் நான் நிறைய படங்களில் பயணித்திருக்கிறேன். நான் இப்போது இந்த இடத்தில் சினிமாவில் இருப்பதற்கு முத்துக்காளை அண்ணனும் ஒரு காரணம்.

என்னுடைய நகைச்சுவையில் 30 சதவீதம் நான் முத்துக்காளை அண்ணனை பார்த்து தான் பண்ணியது. அவர் இல்லை என்றால் நான் இல்லை. வடிவேல் சார், விவேக் சார் இல்லை. அவருடைய படங்களில் நடித்த நடிகர்கள் எல்லாருமே ஓரிடமிருக்கிறது அந்த இடத்தில் சந்திப்போம். அங்கு உட்கார்ந்து பேசுவோம். அப்ப அங்கு முத்துக்காளை அண்ணாவும் வருவார். வந்த உடனே அவர், வாங்க முதல்ல டீ சாப்பிடுங்கள் என்று சொல்லி அதற்கு பிறகு தான் தன்னுடைய பட அனுபவங்களை பகிர்வார். அது அப்படியே எங்களுக்கு புத்தகம் மாதிரி இருக்கும் என்று கூறியிருந்தார்.


நான் முதல் முதலில் காதலுக்கு மரியாதை படத்தில் ஹெல்பராக போனேன். அதன் பின்னர் வேலை என்ற படத்திற்கு போனேன், என்னுடைய மூன்றாவது திரைப்படம் பொன்மனம்(1998ல் வெளியான என்னுடைய அந்த திரைப்படத்தில் ஒரு ஃபைட்டராக அதுவும் ஹெல்ப்பராக தான் சென்றேன். இந்த படத்தில் கமல் கண்ணன் மாஸ்டர் வர முடியாத சூழல் ஏற்பட்டதால் அந்த காட்சியில் நான் நடித்தேன் அந்தப் படத்தில் தம்பி சூரி செட் அசிஸ்டெண்டாக வேலை செய்தார் அதிலிருந்து இன்று வரை நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று கூறி இருந்தார்.


Advertisement

Advertisement