• Jul 25 2025

என்னது பாரதி கண்ணம்மா 2 - ஆ...! கிளைமேக்ஸில் இயக்குநர் போட்ட புது டிவிஸ்ட் இதுதானாம்...கசிந்த தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி சேனலில் கடந்த 2019ல் இருந்து ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. 

இவ் சீரியலை பார்க்கிறார்களோ இல்லையோ, அதில் வரும் காட்சிகளை ட்ரோல் செய்து கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வைரலனதே அதிகம் தான்.

அப்படி டி.என்.ஏ டெஸ்ட் ஒன்றிற்காக இந்த சீரியலை இப்படி இழுத்தடித்து வருகிறார்களே என்று நெட்டிசன்கள் புலம்பியும் வந்தனர்.மேலும் அப்படி ஒரு வழியா வெண்பாவுக்கு திருமணம் பாரதியின் டிஎன்ஏ முடிவு என்று எபிசோட் வந்த நிலையில் சீரியல் முடிந்துவிடும் என்று நினைத்து சந்தோஸப்பட்டார்கள் ரசிகர்கள்.

மேலும் ஒரு வழியாக தான் செய்தது தவறு என்று பாரதி கண்ணாம்மாவிடம் மன்னிப்பு கேட்க வெண்பாவின் சுயரூபம் அம்பளமாகியது. வெண்பாவும் தெனாவட்டில் தான் செய்த கேவலமான செயல் சரியென்று பாரதியிடம் கூறியிருக்கிறார்.

ஒருவழியாக இப்படி போகும் போக்கில் சீரியல்முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் இயக்குநர் கிளைமேக்ஸை வைத்து புது பிளான் போட்டுள்ளார். அதாவது ஹேமா ஆட்டோ டிரைவராகவும் லட்சுமி டாக்டராகவும் வளர்ந்துவிட்டதை கதையாக வைத்து பாரதி கண்ணம்மா 2வை எடுக்கவுள்ளாராம்.அத்தோடு புதுசாக பிக்பாஸ் பிரபலம் தாமரையும் நடிக்க வரப்போகிறார் என புதிய தகவலும் வந்துள்ளது.இதை எண்ணி ரசிகர்கள் பலரும் இது வேணாம் என புலம்பி வருகிறார்களாம்.


Advertisement

Advertisement