• Sep 12 2025

'என் தம்பி அரிவாள எடுத்து வெட்ட வந்தான் சார்' - காதல் திருமணம் செய்த பெண்னுக்கு நடந்த அவலம்..!Tamizha Tamizha Promo...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சி மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக இருக்கின்றது. முன்பு கரு. பழனியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ள நிலையில், தற்போது ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இதில் இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு என்னவெனில் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் VS பெற்றோர் சம்மதமில்லாமல் காதல் திருமணம்  கொண்டவர்கள்.என்பதாகும்,

அந்தவகையில் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய பெண் ஒருவர் கண்கலங்கியவாறு பேசியிருந்தார்.அதாவது அவர் கூறியதாவது;என்னுடைய கலியாணத்துக்கு மூணு நாளுக்கு முதல் தான் வீட்டுக்கு தெரிய வந்தது,தம்பி அரிவாள் எடுத்து வெட்ட வந்தான் சார்,பையன பாத்தா மனசு மாறும் எண்டுவாங்க சார்,ஆனா இவன தூக்கி வெளிய போடுங்கடா எண்டு சொன்னாங்க.என்றார்.


மேலும் அவருடைய கணவன்''இன்னைக்கு வரைக்கும் இவங்கள வீட்டில சேர்த்துக்கல,பெத்தவங்கள விட மத்தவங்களுக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறாங்க என்றார்.

எல்லா இடங்களிலும் சொந்தக்காரங்க தான் பிரச்சினையா இருக்காங்க இத பத்தி என்ன நினைக்கிறீங்க என அங்கு அரங்கத்தில் இருந்த வயது முதிர்ந்த பெண்ணிடம் ஆவுடையப்பன் கேள்வி கேட்ட போது அவர்,''சொந்தக்காரங்கள நம்பாதீங்க .நம்மளிட்ட சொத்து சேர்ந்திருந்தா அந்த சொத்துக்காக வந்து நிப்பாங்க என கூறினார்.


இவ்வாறாக இந்தவாரத்திற்கான தமிழா தமிழா ஷோவின் ப்ரோமோ அமைந்துள்ளது.



Advertisement

Advertisement