• Jul 24 2025

என் பொண்ணு டாக்டர்...வெற்றிமாறன் படிக்காமல் போனதுக்கு காரணம் இதான் – மனம் திறந்த வெற்றிமாறன் அம்மா!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து வருகிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இயக்குநர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குநராக இருந்தார்.


 

அதற்கு பின் தான் வெற்றி மாறன் இயக்குநராக களம் இறங்கினார். பெரும்பாலும் வெற்றிமாறன்– தனுஷ் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறுமாறு. சமீபத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான “அனல் மேல்பனித்துளி” படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தான் வெற்றிமாறனின் தாய் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் அதில் தன்னை பற்றியும் தன்னுடைய மகளை பற்றியும் கூறினார். அவர் பேசுகையில் “என்னுடைய குடும்பத்தில் நான்தான் ட்ரெண்ட் செட்டர். அதிகமாக படித்தது, வேலைக்கு போனது, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி சமுதாயத்தில் முன்னேறி வந்தேன். அதேபோல என்னுடைய மகளையும் மருத்துவராக வேண்டும் என்று குறிக்கோளாக படிக்க வைத்தேன்.

அவர் தற்போது மருத்துவராக எம்பிபிஎஸ் டிமார்ட்டில் இருக்கிறார். ஆனால் வெற்றிமாறன் மட்டும் படிக்காததற்கு காரணம் அவனுடைய விருப்பம்தான். நான் பிள்ளைகளின் விருப்பத்திற்கு கேட்டு தான் எதையும் செய்வேன் அந்த விருப்பம் எனக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் வெளிப்படையாகவே சொல்லுவேன் அவர்கள் அதனை செய்ய மாட்டார்கள்.

இந்நிலையில் என்னுடைய பெண்ணை நான் படிக்க வைத்த காரணம் ஒரு பெண் படித்து பொருளாதார ரீதியாக தன்னுடைய காலில் நின்றால் தான் அந்த பெண்ணால் நிறைவாக முடியும்.

ஏனென்றால் எங்களுடைய காலத்தில் நாங்கள் எல்லாம் பொருளாதார அடிமைகள். எந்த விஷயமாக இருந்தாலும் அப்பா, கணவன் என்றே இருந்து சலிப்படைந்து விட்டது. அப்போதுதான் நினைத்தேன் நம்முடைய குடும்பத்தில் ஒரு பெண் சுயமான காலில் நின்று சம்பாதிக்க வேண்டும் என்று. எந்த ஒரு விஷயத்திற்கு அப்பாவையோ, தம்பியையோ, அம்மாவையோ யாரையுமே சார்ந்து இருக்காமல் சுயமாக இயங்கவும், மக்களுக்கு சேவை செய்யவும் தான் என்னுடைய பெண்ணை படிக்க வைத்தேன் என்று கூறினார் வெற்றிமாறனின் தாய் மேகலா சித்ரவேல்.



Advertisement

Advertisement