• Jul 26 2025

வெற்றிமாறனுடன் பணியாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை- மனம் திறந்து பேசிய துருவ் விக்ரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

2019 ஆம் ஆண்டு ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் துருவ் விக்ரம். இவர் பிரபல நடிகரான விக்ரமின் மகன் என்பதும் முக்கியமாகும். ஆதித்ய வர்மா திரைப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து தனது தந்தையுடன் இணைந்து மகான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தகுதியான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கின்றாராம்.

இப்பொழுது தனது அடுத்த படத்திற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் நடிகர் துருவ் விக்ரம், தனக்கு பிடித்த இயக்குநர் பற்றிய தகவல்களை வெளியே கூறியுள்ளார். அதன்படி இயக்குநர் வெற்றிமாறனுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருப்பதாக நடிகர் துருவ் விக்ரம் கூறியுள்ளார்.

இந்த விடயம் வெற்றிமாறனுக்குத் தெரிந்தால் அப்படி நடந்தால் கண்டிப்பாக அது வேற லெவல் காம்போவாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, அதிகாரம், இறைவன் மிகப் பெரியவன், வாடிவாசல் போன்ற பல படங்கள் உருவாகி கொண்டு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement