• Jul 23 2025

என்னுடைய வாழ்க்கை சீரழிந்ததற்கு அப்பா மட்டும் தான் காரணம்- விஜயகுமார் மீது திடீர் குற்றச்சாட்டை வைத்த வனிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் வனிதா விஜயகுமார். இதனால் இவருக்கு ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வருவதோடு திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார். பிரபல நடிகரான விஜயகுமாரின் மகளான இவர் தனது குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் "தன்னுடைய வாழ்க்கை சீரழிந்ததற்கு என்னுடைய அப்பா தான் காரணம்" என்று கூறியுள்ளார்.மேலும் நான் இப்போது மனதளவில் வலுவான பெண்ணாக இருக்கிறேன். இந்த மாற்றத்திற்கான காரணமும் என்னுடைய அப்பாதான். 

என் குடும்பத்தில் எல்லோரும் அதாவது கவிதா, அனிதா, அருண், ப்ரீத்தா, ஸ்ரீதேவி என எல்லோருடைய பெயரையும் எங்க அப்பா எல்லா இடத்திலும் குறிப்பிட்டாலும் நடுவில் இருக்கும் என்னுடைய பெயர் எதிலும் குறிப்பிடப்படுவதில்லை.


சமீபத்தில் ஒரு நபர் எனக்கு ஒரு வீடியோவை அனுப்பி வைத்தார்.அதாவது பெண் பிள்ளைகளில் நான் மட்டும்தான் அப்பாவுடைய பேச்சை கேட்கவில்லை. அவருக்கு கீழ்ப்படியாமல் நான் இருந்ததெல்லாம் உண்மைதான். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய தந்தை எனக்கு சொன்னது எல்லாமே தவறான அறிவுரைகள். அதை நான் புரிந்து கொண்டதால் அவருடைய பேச்சை நான் கேட்கவில்லை. 

அப்பா சொன்னதை எல்லாம் நான் கடைபிடித்து இருந்தால் என்னுடைய வாழ்க்கையே சிதறி போயிருக்கும். தன்னம்பிக்கை தான் என்னுடைய இப்போதைய பலம். என் அப்பா விஜயகுமார் இல்லை என்று அவர்களால் சொல்ல முடியாது. எனது தந்தையின் பெயருடன் எனது பெயரும் திரும்பத் திரும்ப வந்தால் அது அவர்களுக்கு நான் செய்யும் பழிவாங்குதல். அதற்காகத்தான் நான் அவருடைய பெயரை மாற்றவே இல்லை. அதை செய்யவும் மாட்டேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement