• Jul 26 2025

என் தந்தையை முகமூடிக் கொள்ளையர்கள் கொலை செய்து விட்டார்கள்.. கண் கலங்கிய 'குக்வித் கோமாளி' விசித்ரா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் 4-ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி தற்போது கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகை விசித்திரா களமிறங்கி கலக்கி வருகிறார்.

மேலும் இவர் செந்தில், கவுண்டமணி இருவருடனும் ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். அத்தோடு கவர்ச்சி நடிகையாக வலம் வந்த இவர் திருமணமாகி சினிமாவை விட்டு விலகிய பின்னர் சீரியல்களில் வில்லியாக நடித்து வந்தார்.


இந்நிலையில் விசித்திரா சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சோக சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது தான் தாய் மற்றும் தந்தையை இழந்துவிட்டதால் அனாதை போன்ற உணர்வு தனக்கு ஏற்படுவதாக அந்த பேட்டியில் மிகவும் உருக்கமாக கண்ணீர் கலந்த தொனியில் கூறி இருக்கிறார்.


மேலும் "என்னுடைய தந்தை முகமூடி கொள்ளையர்கள் கொலை செய்யப்பட்டார். அந்த காலத்தில் முகமூடி கொள்ளைகள் அதிகம் நடந்துவந்தது. ஒருவேளை முகத்தை பார்த்து விடுவாரோ என்ற அச்சத்தில் அந்த கொள்ளையர்கள் என் தந்தையை கொன்றிருக்கலாம். அதேபோல் எனக்கு பக்கபலமாக இருந்து வந்த எனது தாயும் சமீபத்தில் இறந்துவிட்டார். இதனால் தாய், தந்தை இருவருமே இறந்த பின்னர் பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாமல் அநாதையாக இருக்கிறேன்" என்றார்.


அத்தோடு "என் தந்தை இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன் பைக்கில் சென்று கீழே விழுந்துவிட்டார். அப்போது அவரது சுண்டு விரலில் காயம் ஒன்று ஏற்பட்டிருந்தது. அதையடுத்த சில தினங்களில் அவர் இறந்துவிட்டதால், அந்த காயம் பற்றி என் இப்போதும் அம்மா தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார். என் தந்தையின் விரலில் காயம் பட்டதற்கு அவ்வளவு கஷ்டப்பட்ட என் அம்மா, அவர் கொலை செய்யப்பட்டபோது எவ்வளவு வலியை அனுபவித்து இருப்பார் என்பதை என்னால் இன்று உணர முடிகிறது" எனவும் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் விசித்ரா.

Advertisement

Advertisement