• Jul 25 2025

“ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் ஸரித்திரமோ “- ராஜா வெற்றி பிரபுவை திருமணம் செய்து கொண்ட தீபிகா- வெளியாகிய போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2000ம் ஆண்டில் விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த சீரியல் தான் காணும் காலங்கள். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த தொடரானது பள்ளிக் காலத்தை மையப்படுத்தியே கொண்டு வெளியானது.இந்தத் தொடர் பல சாதனைகளை படைத்தது.

இந்தத் தொடரில் நடித்த நடிகர்கள் பலர், தொடர்ந்து திரைத்துறையிலும், தொலைக்காட்சியிலும் பல வாய்ப்புகளை பெற இந்தத் தொடர் காரணமாக அமைந்தது.இதனை அடுத்து தற்பொழுது கனாகாணும் காலங்கள் சீசன் 2 டிஸ்னி பிளஸ்என்னும் பிரபல ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகியது.இதில் அபி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் தீபிகா.


நண்பன் கௌதம் காதலன் கலை இருவரையும் ஒன்று சேர்க்க இவர் செய்யும் செயல்கள் எல்லாம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றது. இப்படியான நிலையில் இவருக்கு அண்மையில் திருமணம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.இதனால் தீபிகாவின் காதலன் யார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் இவர் பதிவிட்ட சில புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ராஜா வெற்றி பிரபு தான் தீபிகாவின் காதலன் என்றும் அறிவித்திருந்தனர். ஆனால் தீபிகா யார் என்று சொல்லாமல் சஸ்பென்ஸாகவே வைத்திருந்தார்.


இந்த நிலையில் ராஜா வெற்றி பிரபுவுக்கும் தீபிகாவுக்கும் என்கேச்ட்மென்ட் முடிந்துள்ளது. இதனை தீபிகாவே அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement