• Jul 25 2025

ரஜினியை நான் எடுத்த பேட்டி இன்று வரை ஒளிபரப்பப்படவே இல்லை- எனக்கே அப்பிறம் தான் புரிஞ்சிச்சு- இலங்கைப் பிரபலம் கொடுத்த பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த தொகுப்பாளர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் தனது கம்பீரமான குரலினால் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் அப்துல் ஹமீட். இலங்கையைச் சேர்ந்த பிரபலமான இவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. 

அதில் அவர் கூறியதாவது சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வினை நான் தான் தொகுத்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு ரஜினியிடம் சென்று நீங்கள் வானொலியில் கலந்து கொண்டு பேசிய இன்டர்வியூவை நான் தான் முதலில் தொகுத்து வழங்கினேன்.ஆனால் இன்று வரை ஒளிபரப்புச் செய்யப்படவில்லை என்று கூறினேன்.


அதற்கு அவர் ஏன் என்னாச்சு ஏதாவது தப்பா பேசினேனா என்று கேட்டாரு. இல்லை என்று அப்ப தான் விஷயத்தை சொன்னேன். தீ படப்பிடிப்பின் போது ரஜினி இலங்கைக்கு வந்திருந்தாரு. அப்போ ஒரு நாள் இயக்குநரிடம் கேட்டு விட்டு அவரை பேட்டி எடுத்தேன். அப்போது நான் கேட்ட கேள்வி எல்லாவற்றிற்குமே அவர் ஆமாம் இல்லை என்று தான் பதில் சொல்லிட்டே இருந்தாரு 45 எடுத்த பேட்டி முடிந்தவுடன் ரஜினியை வழி அனுப்பி வைத்து விட்டு தான் அவர் பேசாததற்கான காரணத்தைக் கண்டு பிடித்தேன்.


அவர் பதில் சொல்லக் கூடிய மாதிரி நான் கேள்வி கேட்கல.  ஆமாம் இல்லை என்று சொல்லுற மாதிரி தான் கேள்வி கேட்டேன் என்று, அதுக்கு பிறகு தான் பிரபலங்களைப் பேட்டி எடுப்பது எப்படி என்று கற்றுக் கொண்டேன். அதே போல ஏ. ஆர் ரகுமான் தேசிய விருது பெற்ற போது அவருக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் எழுந்தது. எனக்கு மிகவும் ஆதங்கமாக இருந்தது. எனவே அவரிடம் கேட்டு அவரை பேட்டி எடுத்தேன். அந்த பேட்டிக்கு பிறகு இருவருக்கு இடையிலும் நல்ல நட்பு மலர்ந்தது.இந்த பேட்டியில் அவர் தன்னைப் பற்றிய பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். இந்த பேட்டி பல தடவைகள் ஒளிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement