• Jul 25 2025

சுஹாசினி பாடுவதைப் போல தான் என்னுடைய வாழ்க்கை- முதல் கணவர் பார்த்தீபன் குறித்து பேசிய சீதா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சீதா.இவர் ஆண்பாவம் என்னும் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சினிமாவில் மட்டுமில்லாமல் சன்டிவி, மெகா டிவி, சூர்யா டிவி என பல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்துள்ளார்.


இவர் பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்தீபனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதோடு சீதா தொலைக்காட்சி நடிகர் சதீஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இப்படி பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை சீதா நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில் தன்னுடைய மனைவி அதிகம் எதிர்பார்த்ததுதான் எங்களுடைய பிரிவுக்கு காரணம் என்று கூறியதாக நிருபர் சீதாவிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சீதா நான் சிறிய குடுமபத்தில் இருந்து வந்தவள் தான். எனக்கு நடிகை சுஹாசினி ஒரு படத்தில் பாடுவதை போல “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்” என்று நினைப்பவள். தன்னுடன் வாழும் கணவரிடம் இருந்து இந்த எதிர்பார்ப்பு இருப்பதில் என்ன தவறு எனக் கூறினார்.


மேலும் சீதா அவருடைய காதலை சொல்லும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் நான் இருந்தேன் என்று பார்த்திபன் கூறினார். ஆனால் அதற்கு சீதா கூறியதாவது `நாங்கள் ஒன்றாக நடித்து கொண்டிருக்கும்போது அவர் தொடர்ந்து போன் செய்து அந்த மூன்று வர்த்தயை மட்டும் சொல் என்று கேட்பார். எனக்கும் அவரின் மீது காதல் இருந்ததினால் நான் ஒருநாள் “ஐ லவ் யூ” சொன்னேன். ஆனால் அதனை என்னுடைய அப்பா மற்றொரு போனில் கேட்டு பெரிய பிரச்சனை ஆனது. அப்படிதான் காதல் நிகழ்ந்ததே தவிர பார்த்திபன் சொல்வதை போல இல்லை அவர் பொய் சொல்கிறார் என்று நடிகை சீதா கூறினார். இந்த இன்டர்வியூ மீண்டும் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement