• Jul 25 2025

என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது- புதிய ஜாகுவார் கார் ஒன்றினை வாங்கிய ஷாலு ஷம்மு- அதன் விலை எவ்வளவு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமாகியவர் தான் ஷாலு ஷம்மு. இப்படத்தில்கர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.தொடர்ந்து  மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, பவுடர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 

தொடர்ந்து படவாய்ப்புக் கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வரும் இவர் தன்னுடைய கவர்ச்சிப் போட்டோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இவருக்கு ஏகப்பட்ட விளம்பரங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.


விளம்பரங்களை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு வரும் ஷாலு ஷம்மு அதன் மூலம் அதிகளவில் சம்பாதித்து வருகிறார். மேலும், அவ்வப்போது கிடைக்கும் சினிமா வாய்ப்புகள், ரியாலிட்டி ஷோக்கள் என வருமானத்தை ஈட்டி வருகிறார்.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டது என ஜாகுவார் கார் வாங்கிய போட்டோவை இன்ஸ்டாகிராமில் சற்றுமுன் ஷேர் செய்துள்ளார் ஷாலு ஷம்மு. கடுமையாக இத்தனை ஆண்டுகள் உழைத்த பலன் காரணமாக இப்படியொரு கார் வாங்கிருக்கீங்க சூப்பர் ஷாலும்மா என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜாகுவார் F Pace காரின் விலை சென்னையில் சுமார் 45 லட்சம் இருக்கும் எனக் கூறுகின்றனர். சுமார் 50 லட்சம் மதிப்பிலான காரை நடிகை ஷாலு ஷம்மு வாங்கி இருப்பது ஆச்சரியமான விஷயம் தான் என நெட்டிசன்கள் ஷாலு ஷம்மு போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.


சென்னையில் உள்ள HF கார்ஸ் நிறுவனத்தில் இந்த ஜாகுவார் காரை ஷாலு ஷம்மு வாங்கி உள்ளார். கார் விலையே 50 லட்சம் என்றால் ஷாலு ஷம்முவின் சொத்து பல கோடி இருக்குமே என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement