• Jul 23 2025

''எப்ப கல்யாணம்னு அம்மா கேட்டுக்கிட்டே இருக்காங்க''.... நடிகை தமன்னாவின் காதலர் விஜய் ஓபன் டாக்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் படங்கள், வெப்தொடர்களில் நடித்து வரும் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலித்து வருகிறார்கள். காதலை அண்மையில் தான் உறுதி செய்தார் தமன்னா.இந்நிலையில் வீட்டில் தனக்கு ஏகப்பட்ட பிரஷர் கொடுப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் விஜய் வர்மா. அவர் கூறியிருப்பதாவது,

நான் மார்வாடி சமூகத்தை சேர்ந்தவன். எங்கள் சமூகத்தில் பையன்களுக்கு 16 வயது வந்தாலே திருமண வயது வந்துவிட்டது என நினைப்பார்கள். அதனால் திருமண விவகார பேச்சு ஏற்கனவே துவங்கி, அடங்கிவிட்டது. நான் திருமண வயதை தாண்டிவிட்டதால் அந்த பேச்சு அடங்கியது. மேலும் நான் நடிகராகிவிட்டேன். அதனால் யாரும் அது பற்றி பேசவில்லை.

என் அம்மா இன்னும் திருமணம் பற்றி கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு முறை போன் செய்யும்போதும் கல்யாணம் பற்றி பேசுவார் அம்மா. நான் அதற்கு பதில் அளிக்காமல் பேச்சை மாற்றிவிடுவேன் என்றார்.

லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப்தொடரில் சேர்ந்து நடித்தபோது தான் விஜய் வர்மாவுக்கும், தமன்னாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சக நடிகரை காதலிப்பேன் என நினைத்து பார்க்கவே இல்லை என்றார் தமன்னா.

விஜய்யிடம் பிடித்த குணம் என்னவென்று கேட்டதற்கு, தமன்னாவோ,அவர் என்னை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறார். நான் உருவாக்கி வைத்திருக்கும் உலகத்தை மாற்ற அவர் நினைக்கவில்லை. என் உலகத்தை புரிந்து கொண்டு ஏற்றுள்ளார். என் சந்தோஷமான இடம் விஜய் என்றார்.

விஜய்யும், தமன்னாவும் காதலை ஒப்புக் கொண்ட பிறகு அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். எப்பொழுது தான் திருமணம் செய்வாய் என விஜய்யிடம் அவரின் அம்மாவும் கேட்டு வருகிறார்.

விஜய்யும் சரி, தமன்னாவும் சரி அவரவர் படங்கள், வெப்தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார்கள். திருமணம் பற்றி இருவருமே இதுவரை எதுவும் பேசவில்லை. அதனால் அவர்களாக அறிவிக்கும் வரை காத்திருக்க முடியாது என்கிறார்கள் ரசிகர்கள்.


Advertisement

Advertisement