• Jul 24 2025

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்கிட்ட தப்பா நடந்துகிட்டாங்க- மருத்துவரை வெளுத்து வாங்கிய ஷகீலா

stella / 2 years ago

Advertisement

Listen News!

80களில் மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் ஷகீலா. இவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் தற்பொழுது  காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக சமைத்து வந்தார்.தற்போது யூடியூப் பக்கத்தில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். அப்படி ஒரு பிரபலத்துடன் பேட்டி எடுத்த போது ஷகீலா தனது வாழ்க்கையில் நடந்து ஒரு மோசமான விஷயத்தை கூறியுள்ளார்.


என் அம்மாவின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்று இருந்தேன், மருத்துவர் எழுதியது எனக்கு புரியாததால் அவரிடம் சந்தேகத்தை கேட்டேன்.அப்போது அவர் என் அருகில் வந்து என்னை தவறான முறையில் தொட்டு என்ன சந்தேகம் இப்போ சொல்லு என்றார். உடனே நான் பளார் பளார் என்று அவரை பயங்கரமாக அடித்தேன்.


நான் அடித்த சத்தம் கேட்டு வெளியில் இருந்த நர்ஸ் உள்ளே வந்து தடுத்து, என்னை சமாதானப்படுத்தி அனுப்பினார். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் அட்ஜஸ்ட்மெண்ட் எல்லா துறையிலும் இருக்கிறது என்பதற்காக கூறினேன் என்றிருக்கிறார்.

Advertisement

Advertisement