• Jul 26 2025

எனது செருப்பு சைஸ் 41... தைரியம் இருந்தால் நேரில் வா...திடீரென கொந்தளித்த குஷ்பு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ட்விட்டரில் கிண்டலடித்தவருக்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார் நடிகை குஷ்பு.

தமிழ் திரையுலகில்  நடிகை குஷ்புவுக்கு என்று ரசிகர்கள் மனதில் தனிஇடம் உண்டு. 80களில் தனது திரைப்பயணத்தை ஆரம்பமாகிய குஷ்பு தற்போது வரை டாப் நடிகையாகவே இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிப்படங்களில் இவர் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து ஸ்டார் நடிகர்களுடன் இவர் நடித்து விட்டார்.

சின்னத்திரை,வெள்ளித்திரை என அனைத்திலும் தனது தடத்தை பதித்து அதில் வெற்றியும் கண்ட குஷ்பு பாஜகவில் இணைந்து அரசியலிலும் கலக்கி வருகிறார். அத்தோடு சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, பல சமூக பிரச்சனைகளுக்கும் அவ்வப்போது துணிச்சலுடன் குரல் கொடுத்து வருகின்றார்.

நடிகை குஷ்புவின் மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார் என்றும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் என்னுடைய சகோதரர் அபுபக்கர் விரைவில் குணமடைய தயவு செய்து எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து சனிக்கிழமை குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டதாக, குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்ணீருடன் பகிர்ந்து இருந்தார். மேலும் இதில், எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பும் அளவுக்கு அன்புக்குரியவர்களை, விடைபெறும் நேரம் வரும். அத்தோடு என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிவடைந்து விட்டது என்று பகிர்ந்து இருந்தார்.



குஷ்புவின் இந்த பதிவினைப்பார்த்த ஒரு நெட்டிசன், அக்காவுக்கு சின்ன தம்பி ஞாபகம் வந்திருச்சு என கிண்டலாக பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினை பார்த்து டென்ஷன் ஆன குஷ்பு, எனது செருப்பு சைஸ் 41, தைரியம் இருந்தால் நேரில் வா. இதுதான் உங்க கீழ்த்தனமான புத்தி மாறவே மாட்டீங்களாடா..நீ எல்லாம் கலைஞர் ஃபாலோவர்ஸ்னு சொல்லிக்க வெட்கப்படனும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். குஷ்புவின் கோபத்திற்கு ஆளான அந்த நபர் டெலிட் செய்து விட்டார். அத்தோடு குஷ்பூ உச்சகட்ட கோபம் அடைந்து கோபத்தை வெளிப்படுத்தி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement