• Sep 13 2025

அமிர்தாவாக என்னுடைய மூன்று வருடப் பயணம்- மன வருத்தத்துடன் baakiyalakshmi-serial ரித்திகா வெளியிட்ட வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்றிருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த சீரியலின் கதைப்படி குடும்பத்தில் இருக்கும் பெண்களால் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு சந்திக்கும் கஷ்டங்களும் அதிலிருந்து அவர்கள் வெளியே வந்து சாதித்து பலருக்கும் முன்மாதிரியாக இருப்பது போன்று கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. 

அந்த வகையில் இந்த சீரியலில் நடிகை ரித்திகா அமிர்தா கேரக்டரில் நடித்து வந்தார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். அது மட்டும் அல்லாமல் ராஜா ராணி சீரியலில் முதல் பாகத்திலும் கதாநாயகன் சஞ்சயின் தங்கையாக நடித்திருப்பார்.


 இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைப்பெற்றது. அதற்குப் பிறகும் சீரியலில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி விட்டார். அதாவது அமிர்தாவின் காரெக்டர் நெக்கட்டில் ரோலில் மாற இருப்பதால் தான் அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க சீரியலில் விலகியதை அடுத்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா தற்பொழுது அமிர்தாவாக தன்னுடைய மூன்று வருடப் பயணம் என்னும் கேப்ஷனில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement