• Jul 25 2025

எனது கவி பாட எனது நாவு போதுமானது உடல் அல்ல- தன்னுடைய ஆடை பற்றி விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த கேப்ரியல்லா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' மூலம் தொட்டியெல்லாம் பிரபலமானவர் கேப்ரியல்லா. முன்னதாக இவர் ரஜினியின் கபாலி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். கலக்கப்போவது யாரு ஷோ விற்கு பிறகு உணர்ச்சிபூர்வமான கவிதைகளை உணர்வுகள் சொட்ட சொட்ட வாசித்து நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து இருந்தார் கேப்ரில்லா.

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி நாடகத்தில் நடித்து வருகிறார். இவரது நிறமே கேப்ரில்லாவை  புகழின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. சுந்தரி நாடகத்தை பொருத்தவரை ஒரு கிராமத்தை சேர்ந்த ஏழைப்பெண்ணின் லட்சியத்தை மையமாக வைத்தே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.


மேலும் சமீபகாலமாக கேப்ரியல்லா மாடர்ன் உடையில் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அண்மையில் ஒரு் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் இப்பிடி ரெஸ் பண்ணிட்டு ஏதாவது தத்துவக் கவிதை சொல்லி தமிழரோட ஒழுக்கத்தையும் பண்பையும் காத்தில பறக்க விட வேண்டியர் எனத் தெரிவித்தார்.


இதற்கு கேப்ரியல்லா திறமைக்கும் உடலுக்கும் சுயவிருப்பத்திற்கும் வித்தியாசம் அறியாத வேடிக்கை மனிதர்கள் என்றும் இவர்களின் கருத்து எனக்கு வேடிக்கையே புள்ளைங்களா புடிச்சத நியாயமான மனசோட செஞ்சு சும்மா கலகலன்னு வாழ்க்கைய வாழுங்க எனது கவி பாட எனது நாவு போதுமானது உடல் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement