• Jul 24 2025

தொடர்ந்து சாதனை படைத்து வரும் லியோ படத்தின் நான் ரெடி தான் பாடல்- இத்தனை மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு, விஜய் நடித்து வரும் லியோ படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படத்தின் First Look விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்தது.அதை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த 'நா ரெடி' பாடல் நேற்று மாலை வெளிவந்தது.

அனிரூத் இசையில் உருவான இப்பாடலை தளபதி விஜய், அசல் கோலார் மற்றும் அனிருத் மூவரும் இணைந்து பாடியுள்ளனர்.பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்பாடல் நேற்று மாலையில் இருந்து youtubeல் பல சாதனைகளை செய்து வருகிறது.


இந்நிலையில், தற்போது 10 மில்லியன்களை கடந்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.வாத்தி கம்மிங் பாடலின் சாதனையையும் இப்பாடல் முறியடித்துள்ளதாக பேசப்படுகிறது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.   


இப்பாடலில் விஜய்யின் நடனம், அச்சு பிசகாமல் அவருடன் 2000 பேர் ஆடுவது, பாடலுக்கு போட்டிருக்கும் செட் பல விஷயங்களை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்தப் பாடல் நிச்சயம் பெரிய திரையில் காணும்போது கண்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் விஜய் ரசிகர்கள்.


Advertisement

Advertisement