• Jul 25 2025

அட்லீ பட போஸ்டரை வைத்து நாக்பூர் போலீஸ் செய்த செயல்-வைரல் ட்வீட்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக விளங்குபவர் தான் இயக்குநர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் .அதன்பின் விஜயுடனான பிளாக் பஸ்டர் கூட்டணியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

இவ்வாறு இருக்கையில் அட்லீ தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து லைன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி.

மேலும் இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஜவான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் ஷாருக் கான் முகத்தை முழுவதும் மறைக்கும் விதமாக துணியால் கட்டி வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டார்.

இந்நிலையில் இந்த வித்தியாசமான போஸ்டரைப் பகிர்ந்துள்ள நாக்பூர் சிட்டி போலிஸார் “நீங்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் இப்படிதான் ஆகும்” என்று அதனை வைத்து வித்தியாசமான மீமை உருவாக்கி பகிர்ந்துள்ளனர். இந்த மீம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement