• Jul 25 2025

நம்பினனே எனக்கு போய் நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டாளே- ரச்சிதாவால் கலங்கி அழும் ராபேர்ட் மாஸ்டர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேடம் கொடுக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொருவரும் அந்தக் கதாப்பாத்திரமாகவே இயங்கி வருகின்றனர்.

நேற்று தான் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏடிகே தன்னை பற்றி காமெடியாக செய்த விஷயத்தை சீரியஸாக பேசி சண்டை இழுந்த அசீமிடம், தான் இனி உன்னிடம் பேசவே மாட்டேன் என கோபித்துக் கொண்டு சென்றார் ஏடிகே.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் காலையில் அசீம் ஏடிகே முதுகிற்குப் பின்னால் பேசுபவன் என்றெல்லாம் திட்டினார். இதனால் கடுப்பான ஏடிகே அசீமை போடா என பதிலுக்கு திட்டினார். இது குறித்த முதலாவது ப்ரோமோ வெளியாகியது.

இந்த நிலையில் இதன் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது இந்த டாஸ்க் முடிந்து விட்டதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார்.அப்போது ரச்சிதாவும் அசீமும் இணைந்து செய்த டாஸ்க் அனைவருக்கும் தெரிந்து விட்டது.

இதனால் கடுப்பான ராபர்ட் ரச்சிதா என்னிடம் ஒன்றும் சொல்லாமல் செய்து விட்டாரே எனப் புலம்பி அழுது கொண்டிருக்கின்றார்.இதனால் மற்றப் போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement