• Jul 25 2025

ட்ரெய்லர் ரிலீஸ் தேதி உடன் வந்த நந்தினி.. இணையத்தினை கலக்கி வரும் ஐஸ்வர்யா ராய் புகைப்படம்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பிரமிக்க செய்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா மட்டுமே பொருந்துவார் என ரசிகர்களை ஆணித்தரமாக நம்ப வைத்து விட்டார் ஐஸ்வர்யா. அந்தளவுக்கு கம்பீரத்துடன் கனகச்சிதமாக நடித்திருந்தார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸுகாக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலங்களின் போஸ்டர் தினமும் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. மேலும் சமீபத்தில் அகநக பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா போன்றோரின் புகைப்படங்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்ரைலர் ரிலீஸ் தேதி உடன் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தயாரித்துள்ளது.

மேலும் முதல் பாகமே நல்ல வசூலை பெற்று தந்த நிலையில் இரண்டாம் பாகம் இரட்டிப்பாக வசூல் செய்யும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது. இந்நிலையில் லைக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் பொன்னியின் செல்வன் நந்தினி கதாபாத்திரத்தின் போஸ்டருடன் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகிறது என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement