• Jul 25 2025

குணசேகரனைக் கண்டுபிடித்த கதிர், ஞானம்..? உண்மையை மறைத்த நந்தினி... உளறிக் கொட்டிய விசாலாட்சி..? சூடுபிடிக்கும் 'Ethirneechal' Promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலின் கதைப்படி தற்போது ஆதி குணசேகரன் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். இவரைத்தேடி கதிர் மற்றும் ஞானம் சென்றுள்ளனர். அவர்களை ஒரு பெரியவர் உங்க அண்ணன் இருக்கிற இடத்தைக் காட்டுகின்றேன் எனக்கூறி அழைத்துச் சென்றுள்ளார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரேமோ வெளியாகியுள்ளது. அதில் குறித்த பெரியவரிடம் ஞானம் "என்னய்யா குழப்புறா, அண்ணன் எங்கையா" எனக் கேட்டுக் கத்துகின்றார். பதிலுக்கு அந்த நபர் "நான் சொன்னதை நம்பலையா, அங்க பாருங்க ஆதாரம்" எனக்கூறி அவரின் செருப்பை காட்டுகின்றார். அது ஆதி குணசேகரனின் செருப்பா.? அல்லது அவரின் அண்ணனின் செருப்பா என்பது தெரியவில்லை.


மறுபுறம் வீட்டிற்கு வந்த கதிர் சோறு சமைத்து வெளியில் எடுத்துச் செல்வதை கண்டு விடுகின்றார். உடனே நந்தினியிடம் சென்று "இந்தச் சோறு எல்லாம் எங்கடிபோகுது" எனக் கேட்கின்றார். அதற்கு நந்தினி எதையோ சொல்லி மழுப்புகின்றார்.


இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற கதிர் "மழுப்புறதை விட்டிட்டு சொல்லுடி" எனக்கூறிக் கத்துகின்றார். அதற்கு விசாலாட்சி  "நான் சொல்லுறேன்பா எனக்கூறி உள்ளே வருகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. எனவே விசாலாட்சி உண்மையைக் கதிரிடம் கொட்டி விடுவாரா என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்,


Advertisement

Advertisement