• Jul 26 2025

பிரபல நடிகையுடன் சேர்ந்து பிளாக்கில் டிக்கெட் விற்ற நாஞ்சில் விஜயன்- அதுவும் எவ்வளவு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி ஷோக்களில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.

குறிப்பாக இவர் 'அது இது எது', 'கலக்கப்போவது யாரு', போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னுடைய காமெடி திறனை வெளிப்படுத்தி, போட்டியாளர்களையும், ரசிகர்களையும், சிரிக்க வைப்பது வழக்கம்.


அதேபோல், சில சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் நாஞ்சில் விஜயன் ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, லாக்டவுன் சமயத்தில் நடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணத்தை சற்று ஓவராகவே விமர்சனம் செய்து, வனிதாவிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.

அதே போல் டிக் டாக் பிரபலம் சூர்யா தேவியை இவர் கண்ட மேனிக்கு பேசியதாக, அவர் புகார் கொடுத்த வழக்கத்தில் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


இதை தொடர்ந்து தற்போது, பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்த சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஆதாவது CSK Vs DC  அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை, துணை நடிகை கும்தாஜுடன் இணைந்து,  நாஞ்சில் விஜயன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்து பிளாக்கில் விற்பனை செய்துள்ளார்.1500 ரூபாய்க்கு IPL டிக்கெட் வாங்கி.. 6500க்கு விற்றுள்ளார்.



Advertisement

Advertisement