• Jul 26 2025

தமிழை ஜெயிக்க வைக்க யாருக்கும் தெரியாமல் உதவி செய்த நடேசன்- உண்மையைப் போட்டுடைத்த சரஸ்வதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த  வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அசோஷியேசன் தேர்தலில் தமிழ் வெற்றி பெற்றதால் எல்லோரும் தமிழைப் பாராட்டுகின்றனர்.கோதை அவமானம் தாங்காமல் அங்கிருந்து கிளம்ப ஒருவர் வந்து அர்ஜுனும் கார்த்தியும் அடித்து ஒட்டிய போஸ்டரைக் காட்ட கோதை அதிர்ச்சியடைகின்றார்.

பின்னர் வீட்டுக்கு வரும் கோதை கார்த்திக்கின் சட்டையைப்பிடித்து எதற்காக இப்படிப்பண்ணினாய் எனத் திட்டுகின்றார். உங்களால் தான் நான் அவமானப்பட்டு நிற்கிறேன். என்னைக் கேட்காமல் உங்களை யார் இப்படிப் பண்ண சொன்னது என்று திட்ட வசுவின் அம்மாவும் வசுவும் சமாதானப்படுத்துகின்றனர்.


இருந்தாலும் சமாதானம் ஆகாத கோதை யாரையுமே எனக்கு பார்க்க பிடிக்கல என்று கூறி ரூமுக்குள் செல்கின்றார். தொடர்ந்து வசுவின் அம்மா தமிழ் வீட்டுக்குச் சென்று தமிழைப் பாராட்டி விட்டு போஸ்டர் அடிச்சும் நீங்க எப்படி ஜெயஜச்சீங்க என்று கேட்கின்றார். அதற்கு சரஸ்வதி நாங்களும் போஸ்டரைப் பார்த்திட்டு என்ன செய்யிறது என்று தான் யோசிச்சோம்.


ஆனால் எங்களுக்கு உதவி பண்ணினனே மாமா தான் என்று சொல்ல சந்திரகலா அதிர்ச்சியடைகின்றார். அப்போது சரஸ்வதி ஆமாம்ங்க நாங்க கோயிலில் இருக்கும் போது மாமா வந்து போஸ்டர் விஷயத்தை சொல்லி அது உண்மை இல்லை என நிரூபிக்கணும் என்று தமிழிடம் சொன்னார், என சரஸ்வதி சொல்ல இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிகின்றது.


Advertisement

Advertisement