• Jul 24 2025

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

பல்வேறு சோதனைகளை கடந்து சாதனை படைத்த பெண்ணாக பல பெண்களுக்கும் முன்மாதிரியாக சிறந்து விளங்கும் நயன்தாரா, அண்மையில் தனது காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு அழகான ஆண் குழந்தைகளும் உண்டு.

சமீபத்தில் தான் தனது இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை விமர்சையாக  கொண்டாடினார். மேலும் அவர்களுக்காக பல தொழில்களை ஆரம்பித்து சொத்தினை சேர்த்தும் வருகிறார்


இவ்வாறான நிலையில், நடிகை நயன்தாரா திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, அவரது கணவர் விக்னேஷ் சிவன் சமைத்த உணவை சாப்பிட்டதால் நயன் தாராவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்ததாகவும், இதன் காரணமாகவே அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், மருத்துவமனையில் அவருக்கு  சிகிச்சை அளித்த சில மணி நேரங்களில், நலமாகிவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து இது தொடர்பான எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 

இதன்காரணமாக நயன்தாரா முக அழகிற்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றதாகவும் சிலர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement