• Jul 24 2025

விக்னேஷ் சிவனுக்காக அஜித்திடம் போன் செய்து பேசிய நயன்தாரா- ஆனால் எந்த பிரயோசனமும் இல்லாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கும் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் இருந்து தற்போது விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்களாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில் விக்னேஷ் சிவன் லண்டனில் உள்ளாராம்.

 இதையடுத்து லண்டனில் இருந்து தன் மனைவி நயன்தாராவுக்கு போன் செய்து நடந்ததை கூறி வருத்தப்பட்டாராம் விக்னேஷ் சிவன். சரி கவலைப்படாத, நான் பேசுறேன் என்று கூறி லைகா நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினாராம் நயன்தாரா. ஆனால் அவர்கள் நயன்தாரா கூறியதை கேட்க தயாராக இல்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.


லைகா கேட்காவிட்டால் என்னவென்று அஜித்துக்கு போன் செய்தாராம் நயன்தாரா. சார், தயவு செய்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது விக்னேஷ் சிவனின் கனவுப் படம் என்று அஜித்திடம் கூறினாராம் நயன்தாரா. சாரிமா, கதை சரியில்லை. என்னால் அவர் படத்தில் நடிக்க முடியாது, புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி நயன்தாராவை அதிர வைத்துவிட்டாராம் அஜித்.

லைகா நிறுவனம் விக்னேஷ் சிவனுக்கு இப்படி செய்வது இது முதல் முறை அல்ல. முன்னதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவிருந்தார் விக்னேஷ் சிவன். அப்பொழுதும் அந்த படத்தில் விக்னேஷ் சிவனை வேலை செய்யவிடாமல் செய்துவிட்டது. விக்னேஷ் சிவனுக்கு நியாயம் வேண்டும் என அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள்.

ஸ்க்ரிப்ட் சரியில்லை என்று தானே அஜித் சொல்லியிருக்கிறார். உங்கள் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று கூறவில்லையே. நீங்கள் அஜித்துக்கு ஒரு தரமான ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணுங்க. இந்த கூட்டணி மீண்டும் சேரும்.


 லைகாவிடம் செல்லாமல் நீங்களே, நயன்தாராவுடன் சேர்ந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படத்தை தயாரித்து வெளியிடலாமே என ரசிகர்கள் ஐடியா கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஏ.கே. 62 படத்தை இயக்க விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கிடைத்ததே நயன்தாராவால் தான் என கூறப்பட்டது. நயன்தாராவுக்காக ஓகே சொன்ன அஜித் தற்போது கதைக்காக நோ சொல்லிவிட்டார். அதனால் கதையை சரி பண்ணுங்க அன்பான இயக்குநரே. நிச்சயம் நல்லது நடக்கும். நம்பிக்கையை மட்டும் கைவிட வேண்டாம் என ரசிகர்கள் ஆறுதல் கூறுகிறார்கள்.



Advertisement

Advertisement