• Jul 25 2025

நயன்தாராவுக்கு இந்த விஷயம் தெரியாது- பல நாள் ரகசியத்தை உடைத்த ஆர்யா- விக்னேஷ் சிவனை கலாய்க்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான காதர்பாட்தா என்ற முத்துராமலிங்கம் படம் அண்மையில் வெளியானது.இப்படம் வெளியாக முதல் படத்தை ப்ரமோஷன் செய்வதற்காக படக்குழுவினர் பல்வேறு விதமான பேட்டிகளை அளித்து வந்தனர். இதனால் ஆர்யாவும் பிரபல இன்டர்வியூ ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த இன்டர்வியூவில்  எந்த நடிகையுடன் சேர்ந்து காரில் நெடுந்தூரம் டிரைவ் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆர்யாவோ நயன்தாராவுடன் லாங் டிரைவ் செல்ல வேண்டும் என பதில் அளித்தார்.ஆர்யா மேலும் கூறியதாவது, நயன்தாராவுடன் டிரைவ் போனால் நாம் தான் கார் ஓட்ட வேண்டும். அவருக்கு கார் ஓட்டத் தெரியாது என்றார். 


நயன்தாதராவுக்கு டிரைவிங் தெரியாது என்கிற ரகசியத்தை ஆர்யா கூறினார். ஆனால் அதை நம்ப முடியவில்லையே என்கிறார்கள் ரசிகர்கள். அப்போ படங்களில் தலைவி கெத்தாக கார் ஓட்டியது எல்லாம் சும்மாவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஆர்யாவும், நயன்தாராவும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அதனால் தான் லாங் டிரைவ் என்றதும் நயன்தாராவின் பெயரை சொல்லியிருக்கிறார்.

 இதற்கிடையே நயன்தாராவுக்கு முதலில் டிரைவிங் கற்றுக் கொடுங்கள் அன்பான இயக்குநரே என நயன்தாரா ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தலைவி கார் ஓட்ட நீங்களும், உயிரும், உலகும் ஜாலியாக லாங் டிரைவ் போக வேண்டாமா என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 9ம் தேதி தம்முடைய முதலாவது திருமண நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.. தன் நண்பர் நவீனை வரவழைத்து நயன்தாராவுக்காக ஸ்பெஷலான ஃப்ளூட் நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் நடதத்தியிருந்தார். இது குறித்த வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்ததைக் காணலாம்.



Advertisement

Advertisement