• Jul 25 2025

தனது கணவருடன் பிரபல்யமான இடத்திற்குச் சென்ற நயன்தாரா- இருவரும் ஒரே நிற ஆடையில் சூப்பராக இருக்கிறாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, பாலிவூட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் படத்தில் நடித்து வருகின்றார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரமாக மும்பையில் நடைபெற்று  வருகின்றது. இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட அட்லி முடிவு செய்துள்ளாராம்.

இது தவிர அண்மையில் தனது கணவர் மற்றும் இரட்டைக் குழந்தைகளைத் துாக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.இதையடுத்து நயன்தாரா சமீபத்தில் கதையின் நாயகியாக நடித்த O2, கனெக்ட், போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியது.


 சில படங்களில் நடிக்க கமிட்டான நிலையில், ஒரு சில காரணங்களால் குறித்த நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால், தயாரிப்பாளரிடம்  அட்வான்சாக  பெற்ற பணத்தையும் நயன்தாரா திருப்பிக் கொடுத்ததாக கூறப்பட்டது.


இந்த நிலையில் நயன்தாரா தனது கணவருடன் கோல்ட் ரெம்பிளுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement